Email :vaigaraitnpsc2023@gmail.com
Email :vaigaraitnpsc2023@gmail.com
SIGN IN CONDITIONS
• வணக்கம்.
• பயிற்சி மையத்தில் நேரடி வகுப்பு மற்றும் தேர்வினை எழுதவே வைகறை மாணவர்களை ஊக்குவிக்கிறது.
• இருந்த போதும் மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பயிற்சி மையத்திற்கு நேரடியாக வர இயலாத சூழ்நிலையில் உள்ளவர்களுக்காக இந்த இணையவழி பயிற்சி வாய்ப்பினை வைகறை வழங்குகிறது.
• வைகறை நடத்தும் வகுப்புகள், வழங்கும் பாடக் குறிப்புகள் மற்றும் தேர்வு வினாக்கள் அனைத்தும் தமிழ் வழியில் மட்டுமே இடம்பெறும். இது தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கான பயிற்சி மையம் என்பதை தொிவித்துக் கொள்கிறோம். (English Medium Not Available)
• ஒரு முறை இணையவழி (ONLINE) வகுப்பு அணி (CLASS BATCH ) & தேர்வு அணியில் (Test Batch) இணைந்து விட்ட பிறகு எந்த ஒரு பயிற்சி அல்லது தேர்வுக் கட்டணம் பகுதியாகவோ, முழுமையாகவோ திருப்பித்தரவோ இயலாது.
• மேலும் வேறு நபர்களுக்கோ, வைகறையில் நடைபெறும் நேரடித் தேர்வுக்கோ அல்லது வேறு பயிற்சிக்கோ இந்தக் கட்டணம் மாற்றித் தர இயலாது (எனவே உறுதி செய்துவிட்டு பயிற்சியில் இணையவும்).
• தேர்வு எழுதும் போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ள நேர்ந்தால் vaigaraiTNPSC2023@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது நீங்கள் பயணிக்கும் வைகறை whatsapp குழுவிற்கோ உங்களது தேர்வு தொடர்புடைய பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்களை குறுஞ்செய்தியாக மட்டும் அனுப்ப வேண்டும். அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
• ஒவ்வொரு தேர்வினையும் அட்டவணையில் குறித்த நாளில், குறித்த நேரத்தில் எழுதி விட வேண்டும்.
• பெரும்பாலும் ஞாயிறு அன்று தேர்வு நடைபெறும்.
• தேர்வு மற்றும் வகுப்பு நடைபெறும் நாளினைத் தவிர்த்து பிறிதொரு நாளில் தேர்வினை எழுதவோ, நடத்தப்பட்ட வகுப்பினை காணவோ முடியாது (அனைத்துத் வகுப்பு மற்றும் தேர்வுகளை முறையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும், என்ற எண்ணத்தை தங்களுக்கு உருவாக்குவதற்காகவே இந்த முடிவு)
• வகுப்பு மற்றும் தேர்வில் இணைந்து விட்ட பிறகு மேற்படித் தொடர இயலவில்லை என்றோ, ஒரு சில வகுப்புகள் மற்றும் தேர்வுகளை மட்டுமே கலந்துகொள்ள முடிகிறது, தொடர்ச்சியாகப் படிக்க இயலவில்லை என்றோ மாணவர்கள் கூறும் எந்த ஒரு காரணமும் ஏற்றுக் கொள்ளப்படாது.
• தேர்வினை எழுதி முடித்தவுடன் அந்தக் குறிப்பிட்ட வினாத்தாளுக்கான விடைக்குறிப்புகள் (Answer Key) ஒரு நாள் (24 மணி நேரம்) மட்டுமே உங்கள் இணையதளப் பக்கத்தில் பார்க்க இயலும்.
• தேர்வு தொடர்பான விரிவான விளக்கங்களை Answer Key ஆக PDF வடிவில் பதிவு செய்துள்ளோம். நீங்கள் அதனை பார்த்து தேவைப்படும் குறிப்புகள், விளக்கங்களை குறித்துக் கொள்ள முடியும்.
• மேலும் வினா மற்றும் விடையை (Answer Key Pdf ) மட்டும் Material வடிவில் (Download) பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
• நவீன தொழில்நுட்ப உதவியுடன் இத்தகைய தேர்வு நடைபெறுவதால் பதிவு செய்த நபரைத் தவிர வேறு ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது கண்டறியப்பட்டால் எந்தவித முன்னறிவிப்புமின்றி உங்கள் உள்நுழைவு பகுதி (login) செயலிழந்துவிடும்.
• SCREEN SHOT எடுப்பது, CAMERA வைத்து PHOTO எடுப்பது, SCREEN RECORD செய்வது போன்ற செயல்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய முறைகேடான நடவடிக்கைகளை நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணித்து வருகிறோம். அத்தகைய நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
• வைகறையில் ஏற்கனவே நேரடிப் பயிற்சி மற்றும் தேர்வில் இணைந்தவர்கள் இணையவழித் தேர்வையும் எழுதிப் பார்ப்போம் என எழுத வேண்டாம். ஏனெனில் இணையவழித் தேர்வு என்பது பயிற்சி மையத்திற்கு நேரடியாக வரமுடியாதவர்களுக்காக வைகறை வழங்கும் சிறப்பு ஏற்பாடு. (இந்த விதியைப் படித்த பிறகும் இணையவழியில் இணைந்தால் அதற்கு வைகறை எந்தவிதப் பொறுப்பும் ஏற்காது. செலுத்திய கட்டணமும் திருப்பித்தரப்பட மாட்டாது)
• சுயவிவரப் பக்கத்தில்(PERSONAL INFORMATION) நீங்கள் பதிவிடும் விவரங்கள் உறுதியான மற்றும் உண்மையான தகவல்களாக இருக்க வேண்டும். இத்தகவல்களை வைகறை எப்போது வேண்டுமானாலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் . அவ்வாறு உட்படுத்தும் போது தவறான தகவல்களை அளித்திருந்தாலோ அல்லது ஆய்வுக்கு ஒத்துழைக்க மறுத்தாலோ பயிற்சியில் நீடிக்க இயலாது.
• தற்போதைக்கு எதிர்வரும் 2025 நவம்பரில் நடைபெறவுள்ள TRB TET PAPER I, II & அறிவுப்பு வெளியிடப்படவுள்ள BEO உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் OMR அடிப்படையிலான தனித்தனி Test மற்றும் common class Batch நடைபெறுகிறது. (தற்போதைக்கு TEST க்கு மட்டும் தனி Batch எதையும் வைகறை தொடங்கவில்லை)
• ஒரு சிலர் TET PAPER I மற்றும் PAPER II, ஒரு சிலர் PAPER II மற்றும் BEO என இரண்டையும் எழுத தகுதி உடையவர்களாக இருப்பீர்கள். இதில் தங்களுக்கு எந்த அணியை தேர்வு செய்ய விருப்பமோ அதை மட்டும் தௌிவாக முடிவெடுத்து தேர்வு செய்து கட்டணம் செலுத்தி பயிற்சியில் இணையவும்.
* TET PAPER I மற்றும் PAPER II இரண்டுக்கும் Eligible ஆக உள்ள மாணவர்கள் social + Science இரண்டையும் படிக்க வேண்டும் என்பதால் Paper I க்கு மட்டும் கட்டணம் செலுத்தி படிக்கலாம். அதில் 90% பாடத்திட்டம் முழுமை பெற்றுவிடும்.
* BEO வைப் பொறுத்தவரை இந்த அணி இணையவழி வகுப்பு மற்றும் 12 தேர்வுகள் கொண்ட அணியாக நவம்பர் 15 வரை மட்டுமே நடைபெறும். அதன் பின்னர் தாங்கள் விருப்பப்பட்டால் தனியாக கட்டணம் செலுத்தி புதிய தேர்வு அணியில் மட்டும் சேர்ந்து நவம்பர் முதல் மார்ச் வரை பயிற்சி பெறலாம்.
• மேற்கண்ட விதிமுறைகள் அனைத்தையும் நல்ல மனநிலையில், தௌிவாகப் படித்து புரிந்து கொண்ட பின்பு தேர்வுக்கான கட்டணத்தை இணையவழியில் செலுத்தி பயிற்சியில் இணையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
(முன்னதாக ஏதும் சந்தேகங்கள் இருந்தால் 7598702537, 36, 38 என்ற எண்ணிற்கு அழைத்து தெளிவு பெற்று பயிற்சியில் இணையவும்)
Don't have an account? sign In
Vaigarai TNPSC Coaching Center is running in Karur, Dindigul, Madurai and Karaikudi since 2017 It is ultimate target is to get Govt service for rural and economical Backward students It is running at a very low cost to realize More than 550 of our students who appointed in various departments of state government.
126, 2ND Floor, Durai Complex, Poonga Nagar 1ST Street, Thanthonimalai,
Karur - 639005
VAIGARAI TNPSC COACHING CENTRE © 2023, All Rights Reserved
Design & Developed by Forelius Technologies